செம்மணியை மூடி மறைத்த அனுர- தோலுரித்த சிங்கள கேலிச்சித்திர கலைஞர்கள்
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண பயணம் குறித்து சிங்கள,ஆங்கில ஊடகங்கள், கேலிச் சித்திரங்களை வெளியிட்டுள்ளன.
செம்மணிப் புதைகுழியை பார்வையிடுவதை தவிர்த்து அவர், விளையாட்டரங்கு அமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்க்கும் வகையில், நாமல் அமரசிங்க, அவந்த ஆட்டிக்கல, சஜித் பண்டார ஆகியோரால் கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.