கச்சதீவை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது- அனுர திட்டவட்டம்
கச்சதீவு தொடர்பாக, அரசாங்கம் எந்த வெளிப்புற செல்வாக்கிற்கும் ஒருபோதும் அடிபணியாது என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர், கச்சதீவுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.
இதன்போதே அவர், கச்சதீவு மீனவ சமூகத்திற்கு மிக முக்கியமான இடம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தீவாக இருந்தாலும் சரி, கடலாக இருந்தாலும் சரி, வானமாக இருந்தாலும் சரி, நிலத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.
அந்தப் பொறுப்பை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
எமது தீவுகள் மக்களுக்கானது, எமது கடல் மக்களுக்கானது, எமது வானம் மக்களுக்கானது.
எந்தவொரு செல்வாக்கிற்கும் நாங்கள் ஒருபோதும் அடிபணியமாட்டோம்.
போரின் போது, சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்ட வடக்கின் ஒவ்வொரு நிலமும் மக்களிடம் திருப்பித் தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.