சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கைது
சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கொச்சிக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான முறைப்பாட்டை அடுத்து, கொச்சிக்கடை காவல் நிலையத்தில் இன்று நிமல் லான்சா சரணடைந்துள்ளார்.
இதையடுத்து அவரை கொச்சிக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்தறையினர் தெரிவித்துள்ளனர்.
