36 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
இந்த ஆண்டு புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்காக, சமர்ப்பிக்கப்பட்டிருந்த 36 விண்ணப்பங்களை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
இந்த ஆண்டு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட கால அவகாசத்தின் போது, 86 கட்சிகளின் அங்கீகாரத்திற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.
இவற்றைப் பரிசீலனை செய்த போது, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய வகையில் இல்லாத, 36 விண்ணப்பங்களை நிராகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏனைய 47 விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், பதிவு செய்ய விண்ணப்பித்த கட்சிகளின் பிரதிநிதிகள் நேர்காணல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
