ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள்- விசாரணை ஆரம்பம்
சிறிலங்கா அதிபராக ரணில் விக்கிரமசிங்க இருந்த போது வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் குறித்து, விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.