பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படும் – ஐ.நாவிடம் சிறிலங்கா வாக்குறுதி
பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் சிறிலங்கா அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.
சிறிலங்காவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன்போதே, பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கும் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
எனினும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தொடர்பான எந்த வாக்குறுதிகளும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரால் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.