இன்று காலை முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா சஜித்?
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிபர் வேட்பாளர் தொடர்பான இழுபறிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று காலை சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை, கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நடத்தவுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக, இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
இன்று காலை 7.15 மணியளவில் அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில், சஜித் பிரேமதாச செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.
இதில் முக்கியமான அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று, எத்தகைய தடைகள் வந்தாலும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
