சீனா உள்ளிட்ட 5 நாடுகளின் புதிய தூதுவர்கள் பதவியேற்பு
சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமன ஆவணங்களைக் கையளித்தனர்.
சீனத் தூதுவராக நியமிக்கப்பட்ட செங் சுவேயுவான் மற்றும் தென்கொரியா, சூடான், வியட்னாம், மியான்மார், ஆகிய நாடுகளின் தூதுவர்களே தமது நியமன ஆவணங்களை சிறிலங்கா அதிபரிடம் நேற்று வழங்கினர்.
இந்த நிகழ்வில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

