மேலும்

சிறிலங்காவின் வரவு செலவுத் திட்டத்தில் விலைக்குறைப்புகள், சலுகைகள் அறிவிப்பு

ravi-karunanayake budget (1)சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைக்குறைப்புகள், சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று பிற்பகல் 2 மணியளவில், நாடாளுமன்றத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை, சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார்.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்-

  • பத்து இலட்சம் புதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
  • புதிதாக அரசாங்க சேவையில் இணைந்து கொள்பவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.
  • பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடருந்து  மற்றும் வாகன போக்குவரத்தில் எரிபொருளுக்கு பதிலாக சூரிய சக்தியை பயன்படுத்த திட்டம்.
  • வன்னி, அம்பாறை பகுதிகளில் சிறிய வணிக நிலையங்களை அமைக்க திட்டம்.
  • மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி.
  • 400 கிராம் பால் மா பக்கெற்றின் விலை 325 ரூபாவிலிருந்து  295 ரூபாவாக குறைப்பு.
  • தேயிலை ஏற்றுமதியின் போது ‘இலங்கைத் தேயிலை” என கட்டாயம் பெயரிட வேண்டும்.
  • வவுனியாவில் பொருளாதார  வலயம் அமைக்கப்படும்.
  • காரைநகர், கல்முனை மற்றும் சிலாபம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 470 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • ravi-karunanayake budget (2)பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க திட்டம்.
  • ஜனவரி முதலாம் நாள் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்.
  • இந்தியாவில் உள்ள ஆதார்  திட்டம் போல சிறிலங்காவிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
  • சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்.
  • குறைந்த வருமானம் பெறுபவர்கள் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் ஒரு இலட்சம் வீடுகள் அமைத்து குடியேற்றப்படுவர்.
  • அரச பாவனையற்ற காணிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படும்.
  • தொடர் மாடி வீட்டு திட்டத்துக்கு  40 வீதம் கடன் உதவி.
  • வீடுகள் அமைப்பதற்கு 7 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம். கட்டத்துறை பயிற்சி பெறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு.
  • கொழும்பு சர்வதேச நிதி கேந்திர நிலையத்தை டீ.ஆர் விஜயவர்தன மாவத்தையில் அமைக்க திட்டம்.
  • புதிய வாகன பதிவு கட்டணங்கள் :முச்சக்கர வண்டி, உந்துருளிகளுக்கு 2000 ரூபா, காருக்கு 15000 ரூபா.
  • பாடசாலை மாணவர்களுக்கு  250 ரூபாவில் வங்கி கணக்குகளை ஆரம்பிக்கலாம்.
  • ஆடை, பாதணி மற்றும் மின்சார உபகரணங்கள் உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு.
  •  தனியார்துறை ஊழியர்களின் வேலை நாட்களை வாரத்தில் ஐந்து நாட்களாக குறைக்க தீர்மானம்.
  • தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா அதிகரிக்க பரிந்துரை.
  • தொழிலாளர்களின் சம்பளம் தொழில் வழங்குனர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் அனுப்பட வேண்டும்.
  • ஆசிரியர்களுக்கு விடுதி செலவுக்கு 2 ஆயிரம் ரூபா.
  • தொழிநுட்ப பாடத்தை பல்கலைக்கழகங்களில் கற்க 5 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி.
  • புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்குள் 2 ஆண்டு கட்டாயப் பயிற்சி.
  • 2018 இல் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதிகள் வழங்கப்படும்.
  • பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலகு கொடுப்பனவு முறையில் மடிக்கணனி மற்றும் இலவச வைய் -பை முறை.
  • கிளிநொச்சியில் பொறியியல், விஞ்ஞானப்பீடம் மற்றும் வவுனியாவில் விவசாயபீடம் உருவாக்கப்படும்.
  • நல்லூர் மற்றும் கண்டியில் புற்றுநோய் வைத்தியசாலைகள் அமைக்கப்படும்.
  • சமையல் எரிவாயு விலை 150 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவினாலும் குறைப்பு.
  • காவல் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிப்பு.
  • திகண, பதுளையில் விமான நிலையங்களை அமைக்க திட்டம்.
  • மத்தல விமான நிலையத்தில் விமான தொழில்சார் பயிற்சி நிலையம் ஆரம்பிக்க திட்டம்.
  • உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பால்மா, நெத்தலி, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், பருப்பு, உரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட 11 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 20 வீதத்தினால் குறைப்பு.
  • குழந்தைகளுக்கான பால்மாவின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும்.
  • பெரிய வெங்காயம் அதி கூடிய சில்லறை விலை 85- 95 ரூபா
  • தகரத்தில் அடைக்கப்பட்ட 425 கிராம்  மீன் 125 ரூபாவால் குறைப்பு.
  • நெத்தலி  கிலோ 418 ரூபாவாக குறைப்பு.
  • பருப்பு கிலோ  169 ரூபாவாக குறைப்பு.
  • கட்டா கருவாடு 120 ரூபாவால் குறைப்பு.
  • கடலை கிலோ 169 ரூபாவாக குறைப்பு.
  • கசினோ, புகையிலை ஆகியவற்றுக்கு 25 வீதமாக வரி அதிகரிப்பு

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வரவுசெலவுத் திட்ட உரை நான்கு மணித்தியாலங்கள், 21 நிமிடங்கள் நீடித்தன. பிற்பகல் 2.03 மணியளவில் தொடங்கிய உரை, மாலை 6.24 மணியளவில் நிறைவடைந்தது.

இன்றைய அமர்வில் மகிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *