சிறிலங்காவின் போர் வெற்றி நிகழ்வு- அரசியல்வாதிகளுக்கு அழைப்பு இல்லை
கொழும்பில் நேற்று மாலை நடந்த சிறிலங்காவின் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்விற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த ஊடகச் சந்திப்பில், முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்த நிகழ்விற்கு அழைக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்,
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோர் பத்தரமுல்லவில் நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் நினைவு விழாவில் அதிகாரபூர்வ பதவிகளில் இருப்பவர்கள் என்ற அடிப்படையில் கலந்து கொண்டனர்.
வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த நினைவு நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை.என்று குறிப்பிட்டார்.
நேற்று மாலை நடந்த தேசிய போர் வீரர்கள் நாள் நிகழ்விற்கு, அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல அரசியல் வாதிகளும் கூறியிருந்தனர்.

