மேலும்

அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு சிறிலங்கா பயணம்

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தக் குழுவினர் நேற்று சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை,  பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

பாதுகாப்புத் துறைக்காக வடிவமைக்கப்பட்ட தற்போதைய மற்றும் எதிர்கால திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறித்து இந்த கலந்துரையாடல் மையமாக இருந்தது.

‘பயிற்றுநர்களுக்குப் பயிற்சி’ என்ற கருத்தாக்கத்தின் மூலோபாயச் செயலாக்கம் குறித்து இதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும்,  சிறப்பு வாய்ந்த பாதுகாப்பு குடிமைக் கல்வியுடன் வலுவான இராணுவப் பயிற்சியின் அவசியத்தையும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில்  சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *