ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பில்
வரும் ஓகஸ்ட் மாதம் வரைக்கும் போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் வரை தேவைப்படும், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய ஒரு கப்பல் இந்த மாதம் 28 ஆம் நாள், கொழும்புக்கு வரவுள்ளது.
மற்றொரு மசகு எண்ணெய் கப்பல், இந்த மாதம் 31 ஆம் நாள், நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நாட்டில் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே மேலும் தெரிவித்துள்ளார்.
