சிறிலங்காவுக்கு ட்ரோன்களை விற்க முன்வந்தது துருக்கியே
சிறிலங்காவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) விற்க துருக்கியே அரசாங்கம் முன்வந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளின் ஒரு பகுதியாக, ஆளில்லா விமானங்களை வழங்க தமது நாடு முன்வந்திருப்பதாக, சிறிலங்காவுக்கான துருக்கியே தூதுவர் செமி லுட்பு துர்குட் தெரிவித்துள்ளார்.
பாத் பைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு கொள்வனவு என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.
சிறிலங்கா இராணுவம் கடல்சார் கண்காணிப்பு போன்ற நோக்கங்களுக்காக துருக்கிய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தலாம்.
சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

