கொழும்பு வந்தார் இந்திய இராணுவத் தளபதி
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, நேற்று சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சிறிலங்காவை வந்தடைந்த ஜெனரல் உபேந்திர திவேதியை, சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. டோலகே, சிறிலங்காவுக்கான இந்திய துணைத் தூதுவர் சத்யஞ்சல் பாண்டே ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்
இந்தப் பயணத்தின் போது இந்திய இராணுவத் தளபதி, இன்று சிறிலங்காவின் மூத்த இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளார்.
இரு நாடுகளின் படைகளுக்கும் இடையிலான தொழில்முறை இராணுவ தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், பயிற்சி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு விடயங்களில் இந்த கலந்துரையாடல்களின் போது கவனம் செலுத்தப்படும்.

