ஜப்பானின் பாதுகாப்பு, நிதி அமைச்சர்களுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு
ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜப்பானிய நிதி அமைச்சர் கட்டோ கட்சுனோபு (Kato Katsunobu) மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகடானி (D.M. Nakatani) ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
நிதி அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜப்பானிய உதவி / மற்றும் ஜிகா உதவி மூலம் ஆதரிக்கப்படும் தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் நேற்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகடானியையும் சந்தித்துள்ளார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வி்டயங்களில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.