தங்காலைக்குச் சென்று மகிந்தவைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்
சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
தங்காலையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளை நீக்கிய புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை விட்டு மகிந்த ராஜபக்ச வெளியேறிய பின்னர், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இந்திய- சிறிலங்கா இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சிறிலங்காவின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்தியத் தூதுவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.