அமெரிக்காவுடனான பேச்சுக்களை தவறாக கையாண்டுள்ளது அரசாங்கம்
அமெரிக்காவுடனான வரிக் குறைப்பு பேச்சுவார்த்தைகளை சிறிலங்கா அரசாங்கம் தவறாகக் கையாண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் திறமையின்மைக்காக வெட்கப்பட வேண்டும்.
அமெரிக்காவின் வரி 44 வீதத்தில் இருந்து 30 வீதம் ஆகக் குறைக்கப்பட்டாலும், நாடு அதிக சலுகைகளுக்கான வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது.
இதை சிறிலங்காவுக்கு சாதகமான ஒன்றாக கூற முடியாது.
அரசாங்கம் சரியான, ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தால், நாடு அதிக நிவாரணத்தைப் பெற்றிருக்க முடியும்.
ஆனால், இதை ஒரு வெற்றியாக அரசாங்கம் பெருமையாகக் கூறுவது நகைப்புக்குரியது.
மூலோபாய ரீதியாக பேச்சுவார்த்தைகளை அணுகியிருந்தால், சிறிலங்கா ஒரு பெரிய வரிக் குறைப்பைப் பெற்றிருக்க முடியும்.
நாட்டின் நலனுக்காக செயல்படுவதற்குப் பதிலாக ‘நான்தான்’ என்று சொல்வதில் அவர்கள் மிகவும் மும்முரமாக இருந்தனர்.அதுதான் எங்களை இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு இட்டுச் சென்றது.“ என்றும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.