சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே மரணம்
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே நேற்று மாலை சாவடைந்துள்ளார்.
தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நேற்று மாலை மரணமானார் என குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
82 வயதான காமினி லொக்குகே, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர் ஆவார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான அவர், பின்னர் மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவை ஆரம்பித்த போது, அதில் இணைந்து கொண்டவர்.
கடைசி வரை அந்தக் கட்சியை விட்டு விலகிச் செல்லாமல் இருந்தவர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன அரசாங்கங்களில், விளையாட்டு, எரிசக்தி, மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அமைச்சர் பதவிகளை காமினி லொக்குகே, வகித்திருந்தார்.
இவர் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பலமுறை தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.