ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க மூன்று நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நேற்று மாலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் அதிகாரிகளும் ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
புதிய வாய்ப்புகளைக் கண்டறியும் நோக்கில் தாம் இந்தப் பயணத்தை மேற்கொள்வதாக அனுரகுமார திசாநாயக்க எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் வகிக்கும் அமைச்சுப் பதவிகளுக்கு, அந்தந்த துறைகளின் பிரதி அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.