ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழு சீனாவில் பயணம்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழுவொன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான இந்தக் குழுவினர், சீனாவின் ஷெஜியாங் (Zhejiang) மாகாண ஆளுநர் லியு ஜியை (Liu Jie) சந்தித்துள்ளனர்.
ஷெஜியாங் மாகாண பிரதான பொது வரவேற்பு மண்டபத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜேவிபி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே, ரில்வின் சில்வா தலைமையிலான குழு, சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளது.
ஜேவிபியின் குழுவில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர மற்றும் முனீர் முலாபர், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், தீப்தி வாசலதிலக, தர்மபிரிய விஜேசிங்க மற்றும் கட்சி உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.
ஷெஜியாங் (Zhejiang) மாகாண ஆளுநருடன், துணை ஆளுநர் லு ஷான் மற்றும் தெற்காசியப் பிரிசை சேர்ந்த பான் சுபின் உள்ளிட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளும், இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.