பாதுகாப்பு பணியில் சிறிலங்கா படைகளை ஈடுபடுத்தும் அரசிதழ் அறிவிப்பு வெளியீடு
பொது ஒழுங்கை பராமரிப்பதற்காக, அனைத்து ஆயுதப்படையினரையும் ஈடுபடுத்தும் வகையில், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவு (பகுதி 40) இன் படி, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், சிறிலங்கா அதிபர் இந்த அரசிதழை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த நீர்ப்பரப்பில் பொது ஒழுங்கை பேணும் பணியில், இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றை ஈடுபடுமாறு அழைக்கப்பட்டுள்ளது.