மேலும்

கருப்புப் பட்டியலில் 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் – நாட்டை விட்டு வெளியேறத் தடை

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு – 62,338  இலங்கையர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அரச புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 30 ஆயிரம் வரையான சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் உள்ளனர்.

அவர்களில் சாதாரண சிப்பாய்களில் இருந்து, மூத்த அதிகாரிகள் வரை உள்ளடங்கியுள்ளனர்.  இவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்தப் பட்டியலில் உள்ள சிறப்பு அதிரடிப்படையினரில் பெரும்பாலானோர் விடுமுறை பெறாமல் கடமைக்குச் சமூகமளிக்காமல் இருப்பவர்களாவர். இவர்களில் பலருக்கு எதிராக, நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகள் உள்ளன.

மேலும் தடைவிதிக்கப்பட்டுள்ளவர்களில், அரசியல்வாதிகள், மதகுருமார், மோசடிப் பேர்வழிகள், புலம்பெயர் தமிழ் அனுதாபிகள், மத அடிப்படைவாதிகள், ஆட்கடத்தல் சந்தேக நபர்கள், போதைப்பொருள் கடத்தல் புள்ளிகள், ஆகியோரும் அடங்கியுள்ளனர்.

இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் நடவடிக்கையில் குடிவரவு, குடியகல்வு திணைக்களம், சிவில்  விமான போக்குவரத்து அதிகாரிகள், மற்றும் ஏனைய பங்காளர்களுடன் இணைந்து அரச புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *