பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்காவில் பயணம்
பாகிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் நால்வரைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தின் காலாட்படை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அபிட் ராபிக் தலைமையிலான இந்தக் குழு நேற்று முன்தினம் சிறிலங்கா வந்தது.
நேற்று இந்தக் குழுவினர் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்தப் பேச்சுக்களில் இரண்டு இராணுவங்களுக்கும் இடையிலான பயிற்சி மற்றும் உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் சிறிலங்கா இராணுவத்தின் பயிற்சிப் பணிப்பாளர் அருண வன்னியாராச்சி, காலாட்படை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன, ஆகியோரும் கலந்து கொண்டனர்.