மேலும்

சிறிலங்கா இராணுவத்தில் 40 வீதமானோர் போர் முடிந்த பின் இணைந்தவர்கள்

சிறிலங்கா இராணுவத்தின் தற்போதைய ஆளணியில் உள்ள 40 வீதமானோர் போர் முடிவுக்கு வந்த பின்னர் படையில் சேர்ந்து கொண்டவர்கள் என்று சிறிலங்கா இராணுவத்தின் கிளிநொச்சி படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவம் நடத்தவுள்ள ‘நீர்க்காகம்’ கூட்டுப் பயிற்சி தொடர்பாக விளக்கமளிக்க கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”சிறிலங்கா இராணுவத்தில் தற்போதுள்ளவர்களில் 40 வீதமானோர், 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், இணைத்துக் கொள்ளப்பட்டவர்களாவர்.

போர் முடிந்த பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர்களுக்கு ‘நீர்க்காகம்’ கூட்டுப் பயிற்சி, ஒரு பெறுமதி மிக்க இராணுவப் பயிற்சிக்கான சிறந்த அடித்தளமாக இருக்கும்,

எதிர்காலத்தில் நாட்டுக்கோ மக்களுக்கோ ஏற்படக் கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு இராணுவப் பயிற்சிகள் அவசியம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *