மேலும்

லசந்த படுகொலை குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரி மூன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி, நேற்று நீதிமன்றத்தில் மூன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் வழங்கினார்.

கல்கிசை காவல் நிலையத்தின்  குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியாக இருந்த உதவி ஆய்வாளர் திஸ்ஸ சிறி சுகதபால, நேற்று மாலை  கல்கிசை நீதிமன்ற பிரதம நீதிவான் மொகமட் மிஹால் முன்னிலையில், நிறுத்தப்பட்டு இரகசிய வாக்குமூலம் அளித்தார்.

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் இரண்டாவது சந்தேக நபராக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட இவர், நீதிவான் முன்னிலையில் மூன்றரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்.

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பான தகவல்களை மறைத்தார் மற்றும் அழித்தார் என்ற குற்றச்சாட்டில், கல்கிசை காவல் நிலையத்தின்  முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியான உதவி ஆய்வாளர் திஸ்ஸ சிறி சுகதபால கடந்த பெப்ரவரி மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *