மேலும்

16 – 23 ஆக பிளவுபட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

சுசில் பிரேமஜெயந்த, தயாசிறி ஜெயசேகர, டிலான் பெரேரா, ஜோன் செனிவிரத்ன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, தாரநாத் பஸ்நாயக்க, சுசந்த புஞ்சிநிலமே, அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திசநாயக்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, சந்திம வீரக்கொடி, அனுராத ஜெயரத்ன, சுமேதா ஜெயசேன, ரி.பி.எக்கநாயக்க, திலங்க சுமதிபால.

இவர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த போது, கூட்டு எதிரணியினர் மேசைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

மகிந்த அமரவீர, சரத் அமுனுகம,  நிமால் சிறிபால டி சில்வா, துமிந்த திசநாயக்க, பைசர் முஸ்தபா, மகிந்த சமரசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, விஜித் விஜிதமுனி சொய்சா, பியசேன கமகே, மோகன் லால் கிரேரோ, சிறியானி விஜேவிக்கிரம, லக்ஸ்மன் செனிவிரத்ன, ஹிஸ்புல்லா, ஏ.எச்எம்.பௌசி, லசந்த அழகியவன்ன, சாரதி துஸ்மந்த, மனுச நாணயக்கார, மலித் ஜெயத்திலக, வீரகுமார திசநாயக்க, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், நிசாந்த முத்துஹெட்டிகம, இந்திக பண்டார நாயக்க ஆகியோர் நேற்று வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *