மேலும்

சிறிலங்காவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

Sri Lanka elderly population -cartoonஆசியப் பிராந்தியத்தில் மூத்த குடிமக்களின் தொகை வேகமாக அதிகரித்து வரும் நாடாக சிறிலங்கா மாறி வருகிறது. இதனால் பல்வேறு தீவிர சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்று மருத்துவ நிபுணர் லசந்த கணேவத்த தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சிறிலங்காவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனாக இருந்தது. இது மொத்த சனத்தொகையில் 12.5 வீதமாகும்.

2021ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின்  எண்ணிக்கை, 3.6 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்த சனத்தொகையில் 16.7 வீதமாக இருக்கும்.

Sri Lanka elderly population -cartoon

2041ஆம் ஆண்டில், சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் நான்கு பேரில் ஒருவர் மூத்த குடிமக்களாக இருப்பவர்.

இதனால், நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *