மேலும்

பெங்களூரில் மோசமான காலநிலையால் சிறிலங்கா பிரதமரின் ஆலய தரிசனம் தடைப்பட்டது

ranilஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள, உடுப்பி மாவட்டத்தில் சிறி மூகாம்பிகா அம்மன் ஆலயத்துக்கான பயணத்தை  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மோசமான காலநிலையால், இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உடுப்பி மாவட்டத்தில் சிறி மூகாம்பிகா அம்மன் ஆலயத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை வழிபாடுகளை மேற்கொள்ளவிருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறிலங்கா பிரதமரின் பணியம், ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது.

நேற்றுக்காலை பெங்களூர் வந்து, அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் உடுப்பி சென்று 11 மணியளவில் ஆலயத்தில் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறிலங்கா பிரதமர் வரும் உலங்குவானூர்தி தரையிறங்குவதாற்காக, சிரூரில் தரையிறங்கு தளம் அமைக்கப்பட்டு, அங்கு இந்திய விமானப்படை அதிகாரிகள், உடுப்பி மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் வாகனங்கள், நோயாளர் காவுவண்டி, தீயணைப்பு வாகனங்களுடன் காத்திருந்தனர்.

எனினும், மோசமான காலநிலை காரணமாக, பெங்களூரில் இருந்து உலங்குவானூர்தி புறப்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரணில் விக்கிரமசிங்கவின் பயணம் ரத்துச் செய்யப்பட்டது.

இதனால் சிறிலங்கா பிரதமர் பெங்களூரில் தங்கியுள்ளார்.  காலநிலை சீரானதும், வேறொரு நாளில் அவர் உடுப்பிக்குப் பயணமாவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *