மேலும்

ஜெனிவா செல்லுமாறு ஹர்ஷ டி சில்வாவுக்குப் பணிப்பு – கொழும்பின் திடீர் முடிவு?

harsha d silvaஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் போது, சிறிலங்கா அரசதரப்பு குழுவுக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமை தாங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பித்துள்ள அறிக்கை மீதான விவாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாளை மறுநாள் இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, வரும் மார்ச் 23ஆம் நாள், சிறிலங்கா தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, சிறிலங்கா குழுவுக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை தலைமை ஏற்குமாறு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவே, தலைமை தாங்குவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை ஜெனிவா செல்லுமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கோரியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *