மேலும்

அடுத்த 50 ஆண்டுகளுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் இலாபமீட்டாது – அர்ஜுன ரணதுங்க

Harbour at the town of Hambantotaஅடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் இலாபத்தை ஈட்டாது என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியதால் ஏற்பட்டுள்ள கடன் சுமைகளை தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, இந்த துறைமுகத்தை கூட்டு முயற்சியாக நிர்வகிக்கவும், செயற்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பான உடன்பாடு அடுத்த சில வாரங்களுக்குள் இறுதிப்படுத்தப்படும்.

இவ்வாறு செய்யாது போனால், அடுத்த 50, 100 ஆண்டுகளுக்கு  இந்தக் கடனுக்கான வட்டியைச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

இந்த துறைமுகத்தை அமைப்பதற்கு 750 மில்லியன் டொலர்கள் தேவை என்று சீன நிறுவனம் மதிப்பீடு செய்திருந்தது.

ஆனால் 1.5 பில்லியன் டொலர் செலவில் இந்த துறைமுகம் அமைக்கப்பட்டது.  எனவே எஞ்சிய நிதிக்கு என்ன நடந்தது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *