மேலும்

சிறிலங்கா குறித்தும் ஐ.நா பொதுச்சபையில் பான் கீ மூன் உரை

ban-ki-moonநியூயோர்க்கில் நேற்று ஆரம்பமான ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய தொடக்க உரையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடர் நேற்று நியூயோர்க் நகரில் ஆரம்பமானது. இதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 193 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

வரும் டிசெம்பர் மாதத்துடன் ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகவுள்ள பான் கீ மூன், இந்தக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து தனது இறுதி உரையை நிகழ்த்தினார்.

ms-un-session

பல்வேறு நாடுகளிலும் காணப்படும் மோதல்கள் அவற்றுக்குத் தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாகவும், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்திட்டங்கள் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அவரது உரையில், “மியான்மாரில் மாற்றங்கள் நம்பிக்கைக்குரிய கட்டத்தை எட்டியுள்ளது.

சிறிலங்காவில் போருக்குப் பிந்திய, காயங்களைக் குணப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்றில்லாமல், எல்லா சமூகங்களையும் உள்ளடக்கிய புதிய இணைப்பு ஒன்றைக் கட்டியெழுப்புவதிலேயே இந்த இரண்டு நாடுகளிலும் உண்மையான நல்லிணக்கம் தங்கியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் சிறிலங்கா அதிபருடன் அமைச்சர்கள் மங்கள சமரவீர, கயந்த கருணாதிலக, அர்ஜுன ரணதுங்க, அஜித் பெரேரா உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *