மேலும்

முடிவுக்கு வந்தது சிறிலங்கா படைகளின் ‘நீர்க்காகம்’ கூட்டுப் பயிற்சி

exercise_cormorant_strike_vii-5சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து, மூன்று வாரகாலமாக மேற்கொண்டு வந்த நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் ஒழுங்கமைப்பில் ஏழாவது ஆண்டாக, இடம்பெற்ற இந்தக் கூட்டுப் பயிற்சி கொக்கிளாயில் ஆரம்பித்து, புல்மோட்டைப் பகுதியில் நேற்று நிறைவடைந்தது.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் 2500 சிறிலங்கா இராணுவத்தினர், 638  கடற்படையினர், 506 விமானப்படையினர் மற்றும் பங்களாதேஸ், இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 58 வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

நேற்றுக்காலை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் இடம்பெற்ற நிறைவு நாள் நிகழ்வில், விமானப்படை மற்றும் கடற்படையின் தரையிறக்க தாக்குதல் ஒத்திகை ஒன்றும் இடம்பெற்றது.

இதனை சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, முப்படைகளின் தளபதிகள் நேரில் பார்வையிட்டனர்.

exercise_cormorant_strike_vii-1exercise_cormorant_strike_vii-2exercise_cormorant_strike_vii-3exercise_cormorant_strike_vii-4exercise_cormorant_strike_vii-5exercise_cormorant_strike_vii-6exercise_cormorant_strike_vii-7

மூன்று வாரங்களாக, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு காடுகள் மற்றும் கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த கூட்டுப் பயிற்சியில் சிறிலங்காவின் சிறப்பு படை மற்றும் கொமாண்டோப் படைப்பிரிவுகளுக்கான தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ரோந்து,  காட்டு பயிற்சிகள், சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் தந்திரோபாயங்கள், திடீர் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள், குறிபார்த்துச் சுடுதல், மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டுப் பயிற்சியில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *