சுஸ்மாவின் கொழும்பு பயணம் எப்போது? – இந்தியத் தூதரகம் கைவிரிப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் சிறிலங்கா பயணம் தொடர்பான தகவல்கள் ஏதும் தமக்குக் கிடைக்கவில்லை என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுடன் பேச்சு நடத்த தாம் விரைவில் கொழும்பு செல்லவுள்ளதாக, கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரது சிறிலங்கா பயணம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே, அதுபற்றிய தகவல்கள் தமக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் விரைவில் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இந்தியத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.