மேலும்

சிறிலங்காவின் மிகஉயர்ந்த கட்டடத்தை அமைக்கிறது இந்தியா

Iconic-Towerசிறிலங்காவில் 96 மாடிகளைக் கொண்ட, மிகஉயரமான கட்டடத்தை கொழும்பின் ராஜகிரிய பகுதியில், இந்திய நிறுவனம் ஒன்று, அமைக்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான, சிறீபதி எடிபிஸ் நிறுவனமே, சிறிலங்கா மு
தலீட்டுச் சபையுடன் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.

இதற்கமைய ராஜகிரிய, புத்கமுவ வீதியில், 96 மாடிகளைக் கொண்ட சிறிலங்காவிலேயே மிக உயர்ந்த கட்டடம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்படும்.

தரைத்தளம் மற்றும் 96 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த கட்டடத்தின் உயரம், 363 மீற்றராக இருக்கும். Iconic-Tower1

நான்கு துடுப்பாட்ட மட்டைகள், பந்து ஒன்றைத் தாங்கிப் பிடித்திருப்பது போன்று இந்தக் கட்டடம் வடிவமைக்கப்படும்.

இதில், 376 அடுக்குமாடிக் குடியிருப்புகளும், மற்றும் நீச்சல் தடாகத்துடன் கூடிய 96 உயர் அடுக்கு வீடுகளும் அமைக்கப்படும்.

அத்துடன் நான்கு திரையரங்குகள், நவீன வசதிகளைக் கொண்ட பொழுதுபோக்கு பூங்கா, வணிக நிலையம், நீச்சல் தடாகம்,  உள்ளிட்ட வசதிகளும் இந்தக் கட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.

ஆரம்பத்தில் 330 மில்லியன் டொலர் முதலிடப்படும் இந்த கட்டடத்தை அமைக்க, மேலும் 100 மில்லியன் டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் எண்ணத்தில் உதயமான இந்த திட்டம், 1996ஆம் ஆண்டு அவரது தலைமையிலான சிறிலங்கா துடுப்பாட்ட அணி உலக கிண்ணத்தைக் கைப்பற்றிய வெற்றியை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *