மேலும்

‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்

kipiபுதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) சற்றுமுன்னர் காலமானார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், பிரான்சில் உள்ள மருத்துவமனையில் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்.

கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

அக்காலப் பகுதியில் சுந்தர் என அழைக்கப்பட்ட அவர், ஈழப்போராட்டத்தில், முதன்முதலில் சயனைட் அருத்தி உயிர்த்தியாகம் செய்த, ஈழப் போராட்ட முன்னோடியான பொன்.சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர்.

1990களின் முற்பகுதியில் பிரான்சில் குடியேறிய அவர், அங்கிருந்து கடைசி வரை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பணியாற்றி வந்தவராவார்.kipi1

1953ம் ஆண்டு கிறிஸ்தோபர் பிரான்சிஸ் என்ற இயற்பெயருடன்  யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், பாடசாலைப் படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார்.

1972 ஆம் ஆண்டின் சிறிலங்காவின் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான துண்டறிக்கையை விநியோகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதான மூன்று தமிழ் இளைஞர்களில் கி.பி.அரவிந்தனும் ஒருவர்.

1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார்.

அதையடுத்து, ஈரோஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய அவர், 1990களின் ஆரம்பத்தில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார்.

அங்கிருந்து அவர், பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதுடன், ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தவர்.

பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு வெளியீட்டில் கி.பி.

பல கவிதைத் தொகுதிகளையும், நூல்களையும் எழுதியுள்ள கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் கவிதைகளின் பிரெஞ்சு மொழித் தொகுப்பு, ‘Le messager de l’hiver’, [‘ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன்’] என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அப்பால்தமிழ் என்ற இணைய சஞ்சிகையை நடத்திய அவர், 2009ம் ஆண்டு புதினம் இணையத்தளம் நிறுத்தப்பட்ட பின்னர், புதினப்பலகை இணையத்தளத்தை வெளிக் கொணர்வதில் முக்கிய பங்காறி கடைசி வரை அதற்காக உழைத்து வந்தார்.

– புதினப்பலகை குழுமத்தினர்

17 கருத்துகள் “‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்”

  1. Maheswaran Murugaiah
    Maheswaran Murugaiah says:

    May his soul rest im peace

  2. Devika Gengatharan
    Devika Gengatharan says:

    மரணத்துள் வாழ்கின்ற எமது இனத்துக்கு இத்தகைய இழப்புக்கள் ஈடு செய்ய முடியாதவை.துயரில் பங்கு கொள்கிறேன்.

  3. Ravikumar says:

    ஈழத் தமிழர்களால் நடத்தப்படும் இணையதளங்களிலேயே ஆழமான கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் புதினப் பலகை கி.பி.அரவிந்தனின் உழைப்புக்குச் சான்று. அவரது மறைவு மிகப்பெரும் இழப்பு. என் ஆழ்ந்த இரங்கல்.
    ரவிக்குமார்
    ஆசிரியர், மணற்கேணி
    தமிழ்நாடு

  4. A. Muttulingam says:

    கி.பி.அரவிந்தனை சந்தி
    த்தது கிடையாது. ஆனால் ஒரு முறை பேசியிருக்கிறேன். அருமையானவர். இனிய குரல்.
    In Our Translated World தொகுப்புக்கு தன்னுடைய திசைகள் கவிதையை தந்துதவினார். இன்னும் பல கவிதைகளை அறிமுகப்படுத்தினார். அவருடைய உதவியை மறக்க முடியாது. அவர் பெயர் வாழும். என் துயரை பதிவுசெய்கிறேன் .
    அ. முத்துலிங்கம்

  5. Kamala Skantharajah
    Kamala Skantharajah says:

    Our deepest condolences. One of the greatest human beings I ever met.

  6. arni narendran says:

    Thiru Arivandan was a familiar Tamil voice from France and we have heard him on BBC and other European Tamil Radio stations updating listners in Asia on the literary scene . It was fortunate that he could see the translation of his works in French, in the very language of his adopted country, during his life time. His premature demise brings a void in the French Tamil Ta.mil literary landscape. My heartfelt condolence to the bereaved family.
    Arni Narendran,
    Mumbai

  7. இரா. தமிழ்க்கனல் says:

    படைப்பாளியாகவும் தனித்துவம் மிக்க மனிதராகவும் விளங்கிய ஈழத் தமிழ்ப் போராளியான கி.பி. அரவிந்தன், கடைசிவரை ஈழத்துக்குடிமகனாக இருக்கவிரும்பி, குடியேறிய நாட்டின் குடியுரிமை பெறாமல் வாழ்ந்து மறைந்த உண்மையான போராளிச் சுடர். தேசியத்தை வைத்து தன்னலம் மட்டும் கருதிச் செயல்படும் பலரின் மத்தியில் அவரின் தேசப்பற்று மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உள்ளாக்கப்பட வேண்டியது.

    ஈழத் தேசிய விடுதலைக்குப் பாடுபட்ட ஈகியர் அரவிந்தனுக்கு வீரவணக்கம்!

  8. தீபச்செல்வன் says:

    கி.பி இளந் தலைமுறையுடன் நெருங்கிப்பழகுபவர். ஊக்கப்படுத்துபவர். இணையவழியான அவரது நட்பு மறக்க முடியாதது. கி.பியின் இழப்பு தமிழ் இலக்கியத்திற்கும் ஈழ தமிழ் இனத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரழிப்பு. அன்னாரின் ஆத்மா சாந்திபெறட்டும்!

  9. RAJAJI SRITHARAN says:

    Nanba……

    Have no words to express my feeling..
    Cannot believe that you are no more here.
    May your soul REST IN PEACE.

    Rajaji

  10. Ma.Sithivinayagam says:

    மிகவும் துயருறுகிற வேளை இது. கி.பி என்கின்ற அதிசய கலைத்துவம், அற்புத ஆளுமை, எளிமை வாழ்க்கை, தன் இனத்து விடுதலைகாய் தான் வாழும் வரை பேசிய தலையாய மேலாண்மை இன்று எம்மிடம் இல்லை ஈழதேசத்தின் இணையற்ற கவிஞராக செய்தியாளராக மற்றும் இணையவலை மேலாளராய் விளங்கிய கிபி அரவிந்தன் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. கவிஞர் கி.பி.அரவிந்தன் காவியமாகினர் !!!ஆழ்ந்த அஞ்சலிகள் !!!

  11. A.Gowrikanthan says:

    உழைப்பு, உழைப்பு, உழைப்பு, என்றும் சலியாத, சளையாத உழைப்பு; தனித்திருந்தாலுஞ்சரி, அமைப்பாக இருந்தாலும் சரி அர்ப்பணிப்புடனான உழைப்புடன் வாழ்ந்த அரவிந் துறவியின் செயல் இழந்து போன பூத உடலுக்கு எனது இறுதி அஞ்சலி. உன் புகழுடம்பின் சிற்சில கூறுகள் என்னுள் இருந்து நானும் துறவறவாழ்வு வாழ உன் அனுமதி கோருகிறேன்.

  12. s,ramessh says:

    Have no words to express my heartiest feeling
    MAY YOUR SOUL REST IN PEACE

    NAVALIYOOR S,RAMESSH,

  13. Ilakkuvanar Thiruvalluvan says:

    ‘கி.பி.அரவிந்தன் ஒரு கனவின் மீதி’ என்னும் நூல், பா.செயப்பிரகாசம், இரவிக்குமார் தொகுப்பில் மணற்கேணி வெளியீடாக வந்துள்ளது. இது குறித்து மூத்த இதழாளர் எழில் இளங்கோவன் கருஞ்சட்டைத் தமிழர் இதழில் திறனாய்ந்து வெளியிட்டுள்ளார். நேற்றுதான் படித்தேன். பிறரும் படிக்க வேண்டுகின்றேன். இதைப் படிக்கும் பொழுது படைப்பாளர், போராளி கி.பி.அரவிந்தன் மறைவின் இழப்பு நன்றாகப் புரியும். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் #/தமிழே விழி! தமிழா விழி!

  14. ramadoss kothandaraman seethapathi says:

    ஈழத் தமிழர்களால் நடத்தப்படும் இணையதளங்களிலேயே ஆழமான கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் புதினப் பலகை கி.பி.அரவிந்தனின் உழைப்புக்குச் சான்று. அவரது மறைவு மிகப்பெரும் இழப்பு. என் ஆழ்ந்த இரங்கல்.
    ramadoss kothandaraman seethapathi
    karaikal

  15. நடராஜா கண்ணப்பு says:

    நண்பர்கள்குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் பணி தொடர்வதாக, ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை.

  16. நெடுந் தீவு மகேஷ் says:

    ஈழத்தின் தலை சிறந்த படைப்பாளி களில் ஒருவரான கவிஞர் கி. பி. அரவிந்தன் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாத ஒன்றா கும் விடுதலை உணர்வுடன் வெளிவந்த அவரது காத்திரமான ஆக்கங்கள் தமிழர் மனங்களில் அவரை என்றும் வாழ வைக்கும். ஆன்ம சாந்திக்கு ப் பிரார்த்திக்கிறேன்

  17. thamilarthalam says:

    our deepest syampathy
    moorthy

Leave a Reply to நடராஜா கண்ணப்பு Cancel reply

Your email address will not be published. Required fields are marked *