மேலும்

கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முன்னரே தீர்மானம் எடுத்த சிறிலங்கா காவல்துறை

naguleswaranமன்னார், வெள்ளாங்குளத்தில் முன்னாள் போராளியான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தனிப்பட்ட குரோதத்தினால் நிகழ்ந்த கொலை என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலையாளிகளை அடையாளம் காண முன்னரே, சிறிலங்கா காவல்துறை இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா காவல்துறையின் பதில் பேச்சாளர் ருவான் குணசேகர,

இந்த வழக்கில், சிறிலங்கா காவல்துறையினர் திருப்புமுனை ஒன்றை எதிர்பார்த்திருப்பதாகவும், அது குற்றவாளிகளைக் கைது செய்ய வழிவகுக்கும்.

தனிப்பட்ட குரோதம் காரணமாகவே இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

சில பாகங்கள் இல்லாத, ஒரு ரி-56 துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

அதுவே கொலைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்தக் கொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம் என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கும் இந்தக் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளி நகுலேஸ்வரன் படுகொலைக்கு சிறிலங்கா படையினரே பொறுப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியிருந்தது.

அத்துடன், மன்னார் ஆயரும் இதுகுறித்து விசனம் வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே, இந்தக் கொலையை தனிப்பட்ட குரோதம் என்று திசை திருப்ப சிறிலங்கா காவல்துறை முயற்சிப்பதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *