வடக்கு, கிழக்கில் வாக்களிப்பு மந்தகதியில் – தெற்கில் விறுவிறுப்பு
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரை நேற்று சிறிலங்காவுக்கு நாடு கடத்தியுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், தமக்குப் பிரதமர் பதவி வேண்டாம் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி நாடாக இருப்பதுதான் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கு நல்லது என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது, சிறு பிள்ளைத்தனமான வாதம் என்று அரசியல் ஆய்வாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக, அதுல் கெசாப் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில் அவர், பதவியேற்பு உறுதியுரை எடுத்துக் கொண்டார்.
இலங்கைத்தீவு சீனாவின் ஆதிக்கத்திற்குள் வருவதை விட, இந்தியாவின் நிழலில் இருப்பதே தமிழ் மக்களுக்கு நல்லது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ரக்பி வீர்ர் வசீம் தாஜுதீனின் புதைகுழி இன்று தோண்டப்பட்டு, அவரது சடலத்தின் எஞ்சிய பாகங்கள் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.
ஜனநாயக கட்சியின் தலைவரும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று திருகோணமலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான, பரந்துபட்ட தன்னாட்சி உரிமை, சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமான விவகாரமாக இருக்கும்.
கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.