முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக, முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக, முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று மாலை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூன்று பிரதி அமைச்சர்கள் இன்று தமது பதவிகளை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். பிரதிஅமைச்சர்களான சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன, எரிக் வீரவர்த்தன ஆகிய மூவருமே இன்று பதவி விலகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழுத் தலைவராக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக, கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தினேஸ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக, வரும் ஜூலை 17ஆம் நாள் அனுராதபுரவில் பதிலளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை நீக்கி விட்டு, அதன் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் முயற்சியில் மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு தான் முற்றிலும் எதிரானவன் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் ஆற்றும் உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா- சீன கொமாண்டோக்கள் இணைந்து நடத்தி வந்த பட்டுப்பாதை-2015 கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது கட்டம் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.