மகிந்தவின் மேடையில் ஏறிய மைத்திரியின் அமைச்சருக்கு நேர்ந்த அவமானம்
மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறிய மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளரான கலை மற்றும் கலாசார அமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்க, அவமானப்பட நேர்ந்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறிய மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளரான கலை மற்றும் கலாசார அமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்க, அவமானப்பட நேர்ந்துள்ளது.
சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரதவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தினமும் சுவரொட்டி தொடர்பான இழுபறிப் போர் ஒன்று நடந்து வருகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழு ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குங்கள், அடுத்த ஆண்டு இறுதிக்குள் நல்லதொரு தீர்வை பெற்று தருவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, மருதனார் மடத்தில் இன்று மாலை நடந்த பரப்புரைக் கூட்டத்தில், வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை 5 மணியளவில் வெளியிட்டார்.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு இன்றுகாலை திருகோணமலையில் இடம்பெற்றது.
தமிழரின் இலட்சியத்தை விரைவில் அடைவதற்கு, அடுத்தமாதம் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்துத் தமிழ்மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த கடெற் மாணவரின் துப்பாக்கியில், ரவை ஒன்று சிக்கியிருந்ததை, சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புப் பிரிவினர் கண்டறிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து தரப்பினரின் இணக்கத்துடன், ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் டார்வின் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இருவரும், இலங்கையில் இருந்து புகலிடம் தேடி வந்த தமிழர்கள் என்று அவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது கைவிரலைக் கெட்டியாக பிடித்துக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவே அவரைச் சும்மா தள்ளி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.