மேலும்

Archives

ரணில், மங்களவை அவசரமாக சந்தித்த சீன தூதுவர் – உடன்பாடுகளை மதிக்குமாறு அறிவுறுத்தல்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதையடுத்து, சீனத் தூதுவர் யி ஜியான்லியாங், அவசரமாக சிறிலங்கா பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்புத் துறைமுக நகர நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துவதாக சீன நிறுவனம் அறிவிப்பு

கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை இடைநிறுத்துவதாக அதன் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனமான, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுஸ்மாவுக்கு இராப்போசன விருந்தளித்தார் மங்கள – சம்பந்தன், சந்திரிகாவும் பங்கேற்பு

இரண்டுநாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு,சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.

அனைத்துலக அரங்கில் இந்தியாவின் ஆதரவு தேவை – சுஸ்மாவிடம் கோரினார் மைத்திரி

இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,  நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

ஜெயகுமாரி விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் சட்டமாஅதிபர் திணைக்களம்

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு ஆண்டாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாலேந்திரன் ஜெயகுமாரியைப் பிணையில் விடுவிப்பதற்கு, சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் இழுத்தடிப்புச் செய்து வருகிறது.

இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கருடன் சிறிலங்கா பயணத்தை ஆரம்பித்தார் சுஸ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறிலங்காவுக்கான இரண்டு நாள் பயணத்தை இன்று பிற்பகல் ஆரம்பித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன்  தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் மோடி

சிறிலங்காவுக்கு அடுத்தவாரம் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

மகிந்தவின் மகனிடம் இன்று விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான லெப்.யோசித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

கிழக்கு அரசியலில் திடீர் திருப்பம் – கல்வி, விவசாய அமைச்சுக்களைப் பெற்றது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கிழக்கு மாகாண அரசாங்கத்தில் இணைந்து கொண்டதையடுத்து, கிழக்கு மாகாண அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐ.நா விசாரணை அறிக்கையை உள்ளக விசாரணைக்கு பயன்படுத்துவோம் – ஜெனிவாவில் மங்கள

போரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக விசாரணை மற்றும் நீதிக்கட்டமைப்பு பயன்படுத்தும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.