மேலும்

Archives

விசாரணையைத் தவிர்க்க அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றாரா சுசில் பிரேமஜெயந்த?

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த திடீரென அமெரிக்காவுக்குச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பலை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா

இந்தியக் கடலோரக் காவற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை, சிறிலங்கா கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது இந்தியா. இது தொடர்பான நிகழ்வு நேற்று கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்றது.

கூட்டமைப்புடன் ஒன்றரை மணிநேரம் பேச்சு நடத்தினார் நிஷா பிஸ்வால்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

காலை வாரியது அமெரிக்கா – ஜெனிவாவில் சிறிலங்காவைக் காப்பாற்றப் போவதாக அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில், போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டாலும், சிறிலங்காவுக்குப் போதிய காலஅவகாசம் வழங்க கோரும், சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்வைக்கவுள்ளது.

சிறிலங்காவுக்கு மீண்டும் ஆதரவை உறுதிப்படுத்தியது அமெரிக்கா

நல்லிணக்கம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த சிறிலங்காவுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

சங்ககாரவுக்கு பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி

அனைத்துலகத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து இன்றுடன் ஓய்வு பெற்றுள்ள சிறிலங்கா அணியின் வீரர், குமார் சங்ககாரவுக்கு பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவியை வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வந்துள்ளார்.

மூன்று அமைச்சர்கள் மட்டும் அவசரமாக பதவியேற்றனர்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் மட்டும் இன்று அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக அவசரமாகப் பதவியேற்றுள்ளனர்.

கடற்புலிகளின் படகுகள், ஆயுதங்களை பார்வையிட்ட மைத்திரி – டோறாவிலும் உலாவந்தார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று திருகோணமலை கடற்படைத் தளத்தில், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், மற்றும் ஆயுதங்களைப் பார்வையிட்டதுடன், கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு மூலம் துறைமுகத்தையும் சுற்றிப் பார்வையிட்டார்.

சம்பூரில் மீளக்குடியேறிய மக்களுக்கு காணிஉரிமை சான்றிதழ்களை வழங்கினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் திருகோணமலை சம்பூருக்கு பயணம் மேற்கொண்டு, மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்கினார்.

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சிறிலங்கா அதிபரிடம் நியமனப் பத்திரங்களைக் கையளிப்பு

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, அதுல் கெசாப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனப் பத்திரங்களைக் கையளித்தார்.