தத்தளிக்கும் சென்னை – தவிக்கும் மக்கள் (படங்கள்)
பெருமழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை நகரத்தின் பெரும் பகுதி இன்னமும் வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றது. இலட்சக்கணக்கான மக்களை அநாதரவாக்கியுள்ள வெள்ளம், இன்னமும் வடியாத நிலையில், நள்ளிரவில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது.










