மோசமடையும் அரசியல் கைதிகளின் உடல்நிலை – சிறிலங்கா அரசு பாராமுகம்
தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.
தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.
‘நன்றாக படம் எடுத்து ரீ.என்.ஏ. காரர்களிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) காட்டுங்கள், சந்தோசப்படுவார்கள்’ என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா மற்றும் சீன இராணுவங்களுக்கிடையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும், நல்லெண்ணப் பயணமாகவே சீன உயர்மட்டக்குழு சிறிலங்கா வந்துள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை, எதிர்வரும் நொவம்பர் 4ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான இரண்டு வாரகாலப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை அதிகாரிகள், சிறிலங்கா கடற்படையினருக்கு அளித்துள்ளனர். திருகோணமலையில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக வண.ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக, வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடனான தொடர்புகளை, சீனா தொடர்ந்து பேணி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய – சிறிலங்கா படைகளுக்கு இடையில், ‘மித்ரசக்தி -2015 ‘ என்ற பெயரில் புனேயில் உள்ள இந்திய இராணுவத் தளத்தில் இரண்டு வாரங்களாக நடத்தப்பட்டு வந்த கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தாம் கைது செய்யப்படவுள்ளதை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.