கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு விரைவில் அனுமதி – சீனாவுக்கு சிறிலங்கா தெரிவிப்பு
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கான சமிக்ஞை சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து கிடைத்துள்ளதாக,சீனா அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராகச் சிறிலங்கா வந்த, அந்த நாட்டின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின் தெரிவித்துள்ளார்.










