மேலும்

Archives

‘மிகவும் விரும்பத்தக்க நாடு’ என்ற நிலையை சிறிலங்காவுக்கு வழங்குகிறது பாகிஸ்தான்

வர்த்தகத்துறையில், சிறிலங்காவுக்கு மிகவும் விரும்பத்தக்க நாடு என்ற நிலையை வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- பாகிஸ்தான் இடையே 8 புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்து

சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று நடத்தப்பட்ட உயர்மட்டப் பேச்சுக்களின் போது, எட்டு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமருக்கு கட்டுநாயக்கவில் செங்கம்பள வரவேற்பு

மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று மாலை சிறிலங்கா வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெனிவா தீர்மானம் குறித்து சம்பந்தனுடன் ரொனி பிளேயர் ஆலோசனை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் இன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தெற்கில் ‘சிங்க லே’ பரப்புரை தீவிரம் – ‘இனவாத தீ’ பரவுகிறதா?

சிறிலங்காவின் தென்பகுதியில், சிங்க லே (சிங்கத்தின் இரத்தம்) என்ற இனவாதப் பரப்புரை தீவிரம் பெற்றுள்ள நிலையில், நுகேகொட பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் சுவர்கள், கதவுகளில், சிங்க லே என்று இனந்தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவும் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு

சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நேற்றுடன் ஓய்வு பெற்றிருக்கிறார்.

அரசியலமைப்பு மாற்றம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் – கூட்டமைப்பு இடையே பேச்சு

சிறிலங்காவில் அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறவுள்ள நிலையில், அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

பிரகீத் கடத்தலில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வாளர்களை வெலிக்கடையில் சந்தித்தார் மகிந்த

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.

கொச்சி துறைமுகத்தில் சிறிலங்காவின் போர்க்கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளன.

பொறுப்புக்கூறல் விவகாரம் – சிறிலங்காவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமும் அழுத்தம்

சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், நல்லிணக்கம் மற்றும் நம்பகமான இடைக்கால நீதிப் பொறிமுறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களமும் வலியுறுத்தியுள்ளது.