மேலும்

Archives

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் இந்தியத் தூதுவர் முக்கிய பேச்சு

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பு வந்தார் தோமஸ் சானொன் – மங்களவுடன் பேச்சுக்கள் ஆரம்பம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள, தூதுவர் தோமஸ் சானொன் தற்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.

அமைதி மரத்தை பரிசளித்து மைத்திரியின் பொறுப்பை நினைவுபடுத்தினார் பாப்பரசர்

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் முதலாவது பிரான்சிசை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று வத்திக்கானில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

யாழ்ப்பாணத்தில் ‘இந்தியா கோணர்’ திறந்து வைப்பு

யாழ். பொது நூலகத்தில் “இந்தியா கோணர்” நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார ஆகியோர் திறந்து வைத்தனர்.

காணாமற்போனோருக்கு மரணச்சான்றிதழ் பெறுமாறு அழுத்தம் கொடுக்கும் ஆணைக்குழு

யாழ். மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பான விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு நடத்தி வரும், அமர்வில் சாட்சியமளிக்கும், உறவுகளிடம், மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் பெற்றுக் கொள்ளுமாறு ஆணைக்குழு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் அன்பளிப்பு – யாரும் எதிர்க்கவில்லை என்கிறது இந்தியா

சிறிலங்காவுக்கு இந்தியக் கடலோரக் காவற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலை அன்பளிப்பாக வழங்கியதற்கு, யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார்.

அற,அறிவு வலிமைகளை அரசியல் வலிமையாக மாற்றுவோம் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

மலரும் 2016 ஆம் ஆண்டு, சுதந்திரவேட்கையின் குறியீடாக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் அமைப்பினை நாம் உலகத் தமிழ் மக்களை இணைத்த வண்ணம் எழுதுவதற்குத் தீர்மானித்துள்ளோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். 

இந்திய கொள்கை ஆய்வாளர்கள் குழு சிறிலங்காவில் – பாதுகாப்புச் செயலருடன் பேச்சு

இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி தலைமையில், முன்னாள் இராணுவ அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள், மற்றும் இராஜதந்திரிகளை உள்ளடக்கிய கொள்கை ஆய்வாளர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் தமிழரின் காணிகளை அபகரிக்கும் ஜே.ஆரின் மகன்

சிறிலங்கா காவல்துறையின் உதவியுடன் மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் பெருமளவு காணிகள் சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து மன்னார் திரும்பினார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை நேற்று பிற்பகல் மன்னார் ஆயர் இல்லத்துக்குத் திரும்பினார்.