பிரான்சில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்- 75 பேர் பலி
பிரான்சின் தென்பகுதியில் உள்ள நைஸ் நகரில், நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் 75 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேருக்கு மேல் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சின் தென்பகுதியில் உள்ள நைஸ் நகரில், நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் 75 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேருக்கு மேல் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, நேற்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுடனான இருதரப்பு பொருளாதார, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஊக்கமளிக்க அமெரிக்கா வலுவான ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், உறுதியளித்துள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நேற்று முறைப்படி பதவி விலகியதையடுத்து, அந்த நாட்டின் புதிய பிரதமராக, தெரசா மே பதவியேற்றார்.
அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்றார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் பாராட்டுத் தெரிவித்தார்.
காணாமற் போனோர் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவினால் கடந்த வாரம் விடுக்கப்பட்ட அறிக்கையானது போர்க் காலத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்பது உலகம் முழுழுவதிலும் உள்ள மக்களுக்கு முக்கியமான விடயமாக இருக்கிறது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்தார்.
போருக்குப் பிந்திய நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்நோக்கி நகர்த்துவதற்கு, அதன் பங்காளராக இணைந்திருப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.