மேலும்

Tag Archives: ராவய

கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன் பிணை கோரவுள்ளார் அட்மிரல் கரன்னகொட

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், தாம் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட முன் பிணை கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளார்.

கோத்தாவைக் காப்பாற்றிய சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்யும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே இடைநிறுத்தினார் என்று ‘ராவய’ சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரின் வங்கிக் கணக்கில் 3.2 மில்லியன் ரூபா வந்தது எப்படி?

சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் வங்கிக் கணக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3.2 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் ராவய ஆசிரியர்

மகிந்த ராஜபக்சவை விடவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று செய்தி வெளியிட்ட ராவய சிங்கள வாரஇதழின் ஆசிரியர் கே.டபிள்யூ.ஜனரஞ்சன, சிறிலங்கா காவல்துறை குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.