மேலும்

Tag Archives: யோசித ராஜபக்ச

யோசித ராஜபக்ச விரைவில் கைது

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, யோசித ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யோசித ராஜபக்ச குறித்த விசாரணை அறிக்கையை மூடிமறைக்கிறது பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப். யோசித ராஜபக்ச, தொடர்பான விசாரணை அறிக்கையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மூடிமறைப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

தாஜுதீன் கொலையாளிகள் இருவர் இத்தாலிக்குத் தப்பியோட்டம்

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் இத்தாலிக்குத் தப்பிச் சென்றுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

யோசித ராஜபக்சவின் நண்பியிடம் தீவிர விசாரணை

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, அவரது நண்பியான யசாரா அபேநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

தாஜுதீன் கொலையில் தனது மகனுக்குத் தொடர்பில்லையாம் – மகிந்த ராஜபக்ச கூறுகிறார்

சிறிலங்காவின் ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணத்துடன் தனது மகனுக்குத் தொடர்பிருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

மகிந்தவின் மகனிடம் இன்று விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான லெப்.யோசித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அணித் தலைவர் பதவிகளில் இருந்து தூக்கப்படும் மகிந்தவின் புதல்வர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், சிறிலங்கா கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.

மகிந்தவின் மகன் குறித்த விசாரிக்க சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகன் கடற்படையில் எவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டார், வெளிநாட்டில் பயிற்சிக்கு எவ்வாறு அனுப்பப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

யோசிதவை கடற்படையில் இருந்து விலக்கி விட்டே பதவியைத் துறந்தார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தான் அலரி மாளிகையை விட்டு வெளியேற முன்னதாக, தனது இரண்டாவது மகன் யோசித ராஜபக்சவை சிறிலங்கா கடற்படையை விட்டு விலக அனுமதிக்கும் ஆவணங்களில் ஒப்பமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிப்பின் போது தேர்தல் விதிமுறையை மீறிய மகிந்த குடும்பம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்கச் சென்றிருந்த போது, தேர்தல் ஆணையாளரின் உத்தரவை மீறி, ஒளிப்படம் எடுத்துக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.