சிறிலங்கா படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி – ஒபாமாவிடம் மைத்திரி கோரிக்கை
சிறிலங்கா படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி வழங்குமாறு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி வழங்குமாறு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சிகள் அளிக்கப்படவில்லை என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, வாக்குறுதி வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள், உரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்காத நிலையில், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
சிறிலங்காவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் உச்சக்கட்டமாக நடைபேசியில் எடுக்கப்பட்ட காணொலி ஒன்று பரவவிடப்பட்டிருந்தது.
எந்த உலக தலைவர்கள் இலங்கைத்தீவிற்கு சென்றாலும் இரு நிர்வாக அலகுகளாக கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் கையாளுவது கவனிக்கத்தது. சர்வதேச இராசதந்திர விதிமுறைகளின் கீழ் யாழ்ப்பாணத்துக்கு சமகௌரவம் தரப்படுவது, சர்வதேச செல்வாக்கை பெறுவதற்கு உரிய திறவுகோலாக தமிழ் தலைமைத்துவம் எடுத்து கொள்வதில் தவறேதுமில்லை – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி.
இந்தியப் பெருங்கடலில், தனது நலன்களைப் பாதுகாக்கின்ற உரிமையை சீனக் கடற்படை கொண்டிருப்பதாகவும், அதற்கு இந்தியா பரந்த மனதுடன் இடமளிக்க வேண்டும் என்றும் சீன இராணுவத்தின் அதிகாரபூர்வ சிந்தனையாளர் குழாமின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக தம்மால் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும், தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லை என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பாதுகாப்புக் கற்கைகளுக்கான ரோயல் கல்லூரியைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு கூறுவதற்கு விக்னேஸ்வரன் ஒன்றும் சிறிலங்கா அதிபர் அல்ல, யார் சொன்னாலும் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஒரு சீனா என்ற கொள்கையையும், தென் சீனக் கடல் விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டையும் முழுமையாக ஆதரிப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சீனப் பாதுகாப்புத் தரப்பிடம் உறுதியளித்துள்ளார்.